காஞ்சிபுரம், அக். 9: “பாறை ஓவியங்களும் பண்டைய வரலாறும்” என்கிற தலைப்பில் காஞ்சிபுரம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் நடத்தும் “கூகுள் மீட்” (Google Meet) இணையவழி கருத்தரங்கம் வருகிற அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள எவரும் இக் கருத்தரங்கில் பங்கேற்கலாம்.
இதுவரை நாம் அறியாத பல அரிய செய்திகளையும், பாறை ஓவியங்கள் சொல்லும் களஞ்சியத் தகவல்களையும்.
தமிழ்நாட்டில் காணப்படும் பாறை ஓவியங்கள் எண்ணிக்கையையும், வரலாற்றுக்கு முந்தைய நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாறைக் கலையின் தரம் மற்றும் பன்முகத்தன்மையை காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் சு. உமாசங்கர், காணொலி வாயிலாக எடுத்துரைக்க உள்ளார்.
வருகிற அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 07.00 மணி அளவில் நடைபெற உள்ள இந்த காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாறை ஓவியங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த காணொலி கருத்தரங்கில் (https://meet.google.com/nfw-vizp-tzc) லிங்க் மூலமாக இணையலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் எ.கோவிந்த் தெரிவித்துள்ளார்.
