• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Paalaru
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
Paalaru
No Result
View All Result
Home படைப்புகள் வரலாறு

மருது பாண்டியர்

admin by admin
December 22, 2023
in வரலாறு
0
மருது பாண்டியர்
0
SHARES
234
VIEWS
Share on FacebookShare on Twitter
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது
வாழ்க்கைக் குறிப்பு
                  இன்றைய விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும், அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 ஏப்ரல் 20 இல் சின்ன மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.
இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.
சிவகங்கைச் சீமை மீட்பு
ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போர் சோழவந்தானில் தொடங்கி சிலைமான், மணலூர், திருப்புவனம், முத்தனேந்தல் என நடைபெற்று கடைசியாக மானாமதுரையில் போர் பயிற்சியே பெறாத சுதந்திர தாகமிக்க மக்களின் உதவியோடு போர் வெற்றி பெற்றது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் மருதுபாண்டிய சகோதரர்கள் அமர வைத்தனர்.
உதயப்பெருமாள் கவுண்டர் (துப்பாக்கி கவுண்டர்)
இவர் மருதிருவர் கீழ் துப்பாக்கி படைப்பிரிவை உருவாக்கி அதற்கு தளபதியாக இருந்தவர். திருப்பாச்சேத்தி ஊரின் அம்பலக்காரராக மருதிருவர்களால் நியமிக்கப்பட்டவர். இவரின் இயற்பெயர் உதயப்பெருமாள் கவுண்டர் ஆகும். இவரின் துப்பாக்கி சுடும் திறமையை பார்த்து இவரை துப்பாக்கி கவுண்டர் என அழைக்கத்தொடங்கினர்.
மறைவு
          இவர் 1801-ல் அக்டோபர் 1 -இல் காளையார் கோவிலில் வெள்ளையருக்கும் சிவகங்கை சீமை படைக்கும் நடந்த போரில் தனது மார்பில் பீரங்கி குண்டுகளைத் தாங்கி இவர் வீரமரணம் அடைந்தார்
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

wpDiscuz