மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கிற்கு தற்போது மண் எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே விரைவில் கட்டுமானம் தொடங்க உள்ள நிலையில் தற்போது அங்கே இருக்கும் எல்காட் தொழிற்பூங்கா விரிவாக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் மதுரை வடபழஞ்சியில் பின்னக்கிள் இன்போடெக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் 1.80 லட்சம் சதுர அடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனத்தில் தற்போது 950 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 2026-க்குள் 6 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதையடுத்து வடபழஞ்சி எல்காட் பூங்காவில் 2வது ஐடி நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமானம் முடிந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செயின்ஸிஸ் (Chainsys India Pvt Ltd) அதன் புதிய வளாகத்தை 21 ஜனவரி 2024 அன்று திறக்கிறது. மதுரையில் இதனால் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.ஐடி பார்க் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று ட்வின் டவர் பாணியில் இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று வட்ட வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு கவனம்:தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை மனதில் வைத்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஐடி பார்க் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஐடி பார்க் முடிவு அதன் அடிப்படையில், மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ஐடி பார்க் அமைப்பது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும். பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம். என்று கூறினார்.மண் எடுக்கப்பட்டு உள்ளது.மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கிற்கு தற்போது மண் எடுக்கப்பட்டு உள்ளது. மண் எடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து டெண்டர் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.
மெட்ரோ: ஐடி பார்க் அமைய உள்ள நிலையில், இன்னொரு பக்கம் மதுரை மெட்ரோ தொடர்பான பல்வேறு ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.