கேள்வி: பாலாறு பதிப்பகத்தின் லோகோ எதைக் குறிக்கிறது? எதனால் அவர்கள் அன்னப்பறவையை அடையாளப்படுத்துகிறார்கள்?
🌷🪻🌺🌻🌼🌹
பதில்: பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும் அபூர்வ சக்தி இந்த அன்னப்பறவைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. புராண காலத்தில் அழுக்கிலிருந்து சுத்தமானதைப் பிரிக்கும் பறவையாக அன்னங்கள் கருதப்பட்டனவாம். அன்னம் தூய்மையான முத்துக்களை உணவாக உட்கொள்ளுமாம்.
🌷🪻🌺🌻🌼🌹
அன்னப்பறவை ராமாயணம், மகாபாரதம், வேதங்களில் இந்த பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இதை ஹம்சா ஹம்சபட்சி என்று கூப்பிடுகிறார்கள்.
🌷🪻🌺🌻🌼🌹
கோவிலுக்குப் போகும்போது அங்குள்ள சிற்பங்களில் கூட இந்தப் பறவையை நீங்கள் பார்க்கலாம். வீட்டில் அம்மா கட்டும் பட்டுப்புடவை, சாமிப் படங்களில்கூட இந்த அன்னப் பறவை இடம் பிடித்துவிடும்
🌷🪻🌺🌻🌼🌹
இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக இந்தியப் புராணங்களில் சொல்லியிருக்கிறார்கள். மகாபாரத்த்தில் வரும் நள தமயந்தி கதையில் நளனுக்கும் தமயந்திக்கும் தூது போகும் பறவையாக இது இருந்துள்ளது.
🌷🪻🌺🌻🌼🌹
நீரில் இருந்தாலும் அன்னத்தின் சிறகுகள் நனையாதவை. உலக வாழ்வில் இருந்துகொண்டே ஒட்டாமல் இருப்பதற்கு உதாரணமாக இந்த அன்னப் பறவைகளைச் சொல்கிறார்கள்.
🌷🪻🌺🌻🌼🌹
அன்னப் பறவையைப் போல வாத்தின் சிறகுகளும்கூட தண்ணீரில் ஒட்டாது. வாத்துக்களும் சேற்று நீரிலிருந்து சேற்றைப் பிரித்து சுத்தமான நீரைக் குடிக்கும் திறமை பெற்றது.
🌷🪻🌺🌻🌼🌹
அன்னப்பறவை பூமியில் நடக்கும், வானத்தில் பறக்கும், தண்ணீரில் நீந்தும்.
🌷🪻🌺🌻🌼🌹
இந்தியப் புராணங்களைத் தவிர கிரேக்கப் புராணங்களிலும் அன்னப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐரிஷ் புராணக் கதைகளிலும் அன்னங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
🌷🪻🌺🌻🌼🌹
பகலில் அன்னங்களாக வானில் பறக்கும் பறவைகள் இரவில் அழகான பெண்களாக மாறுவதாக ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் அன்னப் பறவையைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன.
🌷🪻🌺🌻🌼🌹
தற்காலத்தில் உள்ள “ ஸ்வான் “ என்று அழைக்கப்படும் அன்னப் பறவைகளும் புராணத்தில் வரும் அன்னப் பறவைகளும் ஒன்றல்ல.
🌷🪻🌺🌻🌼🌹
இத்தகைய சிறப்பு வாழ்ந்த வரலாறை கொண்ட அன்னப்பறவையை பாலாறு பதிப்பகத்தார் தனது அடையாளமாக கொண்டுள்ளனர்.
🌷🪻🌺🌻🌼🌹
கெளதம புத்தர் உள்பட உலகில் தோன்றிய அத்தனை மகான்களும் வலியுறுத்தும் நல்லறிவு, நற்சிந்தனை, நல்லெண்ணம், நற்செயல்களை புத்தகங்களின் வாயிலாக பரப்பும் அறப்பணியை செய்து வரும் பாலாறு பதிப்பகம், தூய அறிவு மையம் (PURE KNOWLEDGE CENTRE) எனும் வாசகத்தை இலட்சிணையில் பொறித்துள்ளது.
🌷🪻🌺🌻🌼🌹
#பாலாறுலோகோ #பாலாறுஇலட்சிணை #paalarulogo #palaru #palarupublishers #palarlogo #swan #palarupublishinghouse
