நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.
திருச்செந்தூர், ஜன.28: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், சிறப்பு தரிசனங்களுடன் திருச்செந்தூர் – ராமேஸ்வரம் 3 நாள் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளதாக அமைச்சர்.ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் 3 நாட்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம், சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேஸ்வரம் சென்று திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
மேற்கண்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அமைந்துள்ள செந்தில் ஆண்டவர் திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்தை பார்க்கலாம்.
உலகிலேயே முதலில் தோன்றிய முதல் கோயில் ராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும் உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்படும்.
தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
மேலும் இச்சுற்றுலாவில் தனுஷ்கோடியினை சிறப்பு பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை (டோல் ப்ரீ-180042531111 ) 044-25333333 மற்றும் 044-25333444 தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
