நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா,
சென்னை, அக். 23: மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் அமிர்தவள்ளி இரகுபதி நினைவு இலக்கியப் பரிசு வழங்கும் விழா வரும் 26ம் தேதி நடக்கிறது.
சென்னை மாநிலக் கல்லூரி பவல் அரங்கில் மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில், சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும், சான்றிதழ்களையும் பணியாளர் தேர்வுக்குழு மேனாள் தலைவர் ந.க. இரகுபதி, பேராசிரியர் இரா.குருநாதன் ஆகியோர் வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு இலக்கிய மாமணி மெய் ரூஸ்வெல்ட் தலைமை வகிக்கிறார். முனைவர் இதயகீதம் ராமானுஜம் வரவேற்கிறார். சங்கத்தின் தேசியத் தலைவர் கோ. பெரியண்ணன் தொடக்கஉரை நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி கல்வித்துறை இணை இயக்குநர் ஆர். ராமன், யூனிவர்சிட்டி ஆப் டான்டீ டாக்டர் கல்பனா ரகுபதி கலந்து கொண்டு பேசுகின்றனர்.
அமிர்தவள்ளி ரகுபதி இலக்கியப் பரிசு ரூ. 5000 பெறும் எழுத்தாளர்கள் Hன்வருமாறு:
சீ. சுரேஷ்குமார் ஐஏஎஸ், வெ. தமிழழகன், சக்திமான் அசோகன், அ. ஈஸ்வரன், ஜெயந்தி ஆனந்தன், ந. சுரேஷ்ராஜன்.
ரூ. 1000 பரிசுபெறும் எழுத்தாளர்கள் பின்வருமாறு:
தண்ணீர்குளம்தாசன், குடியாத்தம் குமணன், செ. ஏழுமலை, சரஸ்வதி சீனிவாசன், வ.கோ., பாண்டியன், ஜோ. ஜாய்ஸ்திலகம், திருப்புகழ் மதிவண்ணன், சத்தியவாடிகோ இராமலிங்கம், வெற்றிச் செழியன், உமா சுந்தர், ரேவதிபாலு, இன்பகலை பிரகாஷ்,சரோஜா சகாதேவன், சிவபாக்கியம் தனபால், இரா. ஆரோக்கியமேரி, சுப. சந்திரசேகரன்.
நிகழ்ச்சியை பேராசிரியர்கள் பிரபாகரன், முனைவர் பூங்கோதை ஒருங்கிணைக்கின்றனர். மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மன்றம் எம்.ஆர். இளங்கோவன் நன்றி கூறுகிறார்.
இதற்கான விழா ஏற்பாடுகளை தேவராஜன், ஈஸ்வரி, சண்டமாருதம், கோவி பழனி, நாக. சொக்கலிங்கம், தயாநிதி, ஹரிஹரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இத்தகவலை எழுத்தாளர் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் அக்னி பாரதி தெரிவித்துள்ளார்.
