நமது நிருபர், பாலாறு மீடியா
“நல்ல தமிழ் நூல்களுக்கு நாடுவீர் தமிழ்நண்பன்..! ” எனும் மந்திர வார்த்தையை விற்பனை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் சென்னை தேனாம்பேட்டை தமிழ்நண்பன் பதிப்பகத்தார், கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி 2024 வரை வெளியிட்டுள்ள நூல்களின் பட்டியலை வாசகர்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் இயங்கி வருகின்றன. லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்ததகங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் புத்தகங்கள் விற்பனை நடந்து வருகின்றன.
இந்தநிலையில், கொரோனோ நோய்த் தொற்றுக் காலத்தில், சிரமான சூழலுக்கு மத்தியில் வாசகர்களை புத்தகங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நூலக இயக்கமாக தொடங்கப்பட்டதுதான் தமிழ்நண்பன் எனும் பதிப்பகம்.
சென்னை தேனாம்பேட்டையில், எல்லோரும் அறிந்த அண்ணா அறிவாலயம் அருகே விற்பனை மையத்தை கொண்டுள்ளது இந்த தமிழ்நண்பன் பதிப்பகம்.
பதிப்பகம் தொடங்கிய 3 ஆண்டுகளில் நூறு புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது இந்த பதிப்பகம்.
இதுகுறித்து இதன் உரிமையாளர் உமா சரவணன் கூறுகையில், பதிப்பகம் தொடங்க வேண்டும் என்பது எங்களின் நீண்டநாளைய கனவாக இருந்தது. பதிப்பகம் தொடங்கும் முன் எங்கள் வீட்டிலேயே ஒரு பகுதியில் நூலகம் அமைத்து, வாசிப்போம், வளர்வோம் அறக்கட்டளை எனும் பெயரில் நூல்களை இலவசமாக படிக்கக் கொடுத்து வந்தோம். நிறைய நண்பர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கி வந்தோம் என்கிறார் உமா சரவணன்.
எனது கணவர், பத்திரிகைத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த அனுபவத்தால் இந்த நூலகத்தையே பதிப்பகமாக மாற்ற முடிவு செய்தோம். நண்பர்கள் உதவியால், பதிப்பகத் தொழிலில் 2021ல் அடியெடுத்து வைத்தோம். 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் சென்னை புத்தக் கண்காட்சியில், நண்பர்கள் சிலர் உதவியால் வேறு சில பதிப்பகத்தின் பெயரில் புத்தகங்க அரங்குகளை கண்காட்சியில் அமைத்து செயல்பட்டோம். ஓரளவு வெற்றியும் கண்டோம்.
இதில் கிடைத்த அனுபவங்களை கொண்டு முதன்முதலாக 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சொந்தமாக அரங்கு ஒன்றை அமைத்தோம். இதில்தான் எங்களுக்கு நல்ல அறிமுகமும், சக்சஸும் கிடைத்தன. அதே கண்காட்சியை ஒட்டி, புதிதாக பாலாறு என்ற தனித்துவமான இலக்கிய நூல்களுக்கான பதிப்பகத்தையும் தொடங்கி, இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்கிறார் உமா சரவணன்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நண்பன் பதிப்பகத்தை பொறுத்தவரை, தமிழ் இலக்கிய நூல்களை எங்களிடம் எப்போது வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெறலாம். தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள், குறிப்பாக தமிழக அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மறு பதிப்பு செய்யப்பட்டு, (நல்ல தமிழ்நூல்கள்-100) விற்பனைக்கு உள்ளது. இதற்கான நூல் பட்டியல் கீழே கொடுத்துள்ளோம். எப்போதும் வாசகர்களின் ஆதரவை நாடுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
+நூல் பட்டியல்- 2021 to 2024 +
வரிசை எண், நூலின் பெயர், நூலாசிரியர்
+++++++++++++++++++++++++++++++++++++
1. திருக்குறள்- உண்மைப் பொருள் விளக்கம்- நாவலர் நெடுஞ்செழியன்
2. சோழர் சரித்திரம்- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
3. காவிரிப்பூம்பட்டினம்- தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
4. குமரிக்கண்டம் (அ) கடல் கொண்ட தென்னாடு-கா.அப்பாத்துரையார்
5. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வரலாறு மற்றும் விதிகள்-வழக்கறிஞர் சி.பி. சரவணன்
6. புதிய தமிழகம்-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
7.பெண் ஏன் அடிமையானாள்? -தந்தை பெரியார் ஈ.வெ.ரா.
8.நான் நாத்திகன் ஏன்?-மாவீரன் பகத்சிங், தமிழில் தோழர் ப. ஜீவானந்தம்
9. பெளத்தமும், தமிழும்-மயிலை சீனி.வேங்கடசாமி
10.ஊரும், பேரும்-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
11.தமிழர் சமயம் எது?-ந.சி.கந்தையா பிள்ளை
12. மாமன்னன் ராஜராஜன் -கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
13. திராவிடம் என்றால் என்ன? -ந.சி. கந்தையா பிள்ளை
14. தமிழர் சமயம்- கா.சுப்பிரமணியப் பிள்ளை
15. அறியப்படாத தமிழகம்- தொ. பரமசிவன்
16.தமிழர் திருமணத்தில் தாலி-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
17.அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்-சி.என். அண்ணாதுரை
18.வர்ணாஸ்ரமம்+அருட்பெருஞ்ஜோதி- அண்ணாவின் இரு சொற்பொழிவுகள்
19.இந்தியாவில் சாதிகள்+மனு ஸ்மிருதி- அம்பேத்கரின் இரு பிரசுரங்கள்.
20.முருகன்-கடவுளா?, முப்பாட்டனா?- அறிவுமதி
21.பாரதியார் வாழ்க்கை வரலாறு-வ.ராமசாமி
22.தமிழர் வரலாறும், பண்பாடும்-நா. வானமாமலை
23. தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்-மணவை முஸ்தபா
24. காலம் தேடும் தமிழ்-மணவை முஸ்தபா
25. பேராசிரியரின் பெருநூல் திரட்டு (10 நூல்கள்)- பேராசிரியர் க.அன்பழகன்
26. புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்- உ.வே. சாமிநாதய்யர்
27. திருவள்ளுவரும் திருக்குறளும் உ.வே. சாமிநாதய்யர்
28. நான் கண்டதும் கேட்டதும்- உ.வே. சாமிநாதய்யர்
29. சுயசரிதை- மகாகவி பாரதியார்
30. பாரதிதாசன் கவிதைகள் – 3 தொகுதிகள்
31. தமிழ்மணம்- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
32. தமிழ்த்தேன்- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
33. ஆரியராவது திராவிடராவது- உரைநடை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
34. பார்ப்பனச் சூழ்ச்சியா-உரைநடை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
35. வள்ளலார் யார்?-அ.க. நவநீதகிருட்டிணன்
36. தமிழ் வளர்ந்த கதை-அ.க.நவநீதிகிருட்டிணன்
37. கலைஞரைப் பற்றி- உவமைக் கவிஞர் சுரதா
38. சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்-என்.வி.கலைமணி
39.உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்-என்.வி. கலைமணி
40. தந்தை பெரியார்-கவிஞர் கருணாநந்தம்
41. பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்-பெரியசாமி தூரன்
42. பாரதியும் கடவுளும்-பெரியசாமி தூரன்
43. தமிழின் சிறப்பு-கி.ஆ.பெ. விசுவநாதம்
44. எது வியாபாரம்? எவர் வியாபாரி?-கி.ஆ.பெ. விசுவநாதம்
45. நாயன்மார் கதை -(4 பகுதிகள்)-கி.வா.ஜெகந்நாதன்
46. ஆலயங்கள் சமுதாய மையங்கள்-குன்றக்குடி அடிகளார்
47. என் பார்வையில் கலைஞர்-சு.சமுத்திரம்
48. தமிழ் வரலாறு-ஞா. தேவநேய பாவாணர்
49. தமிழர் மதம்-ஞா. தேவநேய பாவாணர்
50. கால்டுவெல்-திருநெல்வேலி சரித்திரம்-டாக்டர் ந.சஞ்சீவி
51. வேலூர்ப் புரட்சி-டாக்டர் ந. சஞ்சீவி
52. மானங்காத்த மருது பாண்டியர்-டாக்டர் ந. சஞ்சீவி
53. வீரத்தலைவர் புலித்தேவர்-டாக்டர் ந. சஞ்சீவி
54. சோழர் வரலாறு-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
55. பல்லவர் வரலாறு-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
56. சிந்துவெளி நாகரிகம்-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
57. தமிழ்மொழி இலக்கிய வரலாறு-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
58. சேக்கிழார் வரலாறு-டாக்டர் மா. இராசமாணிக்கனார்
59. தமிழ் விருந்து-டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
60. தமிழக ஊரும் பேரும்-டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
61. தமிழர் வீரம்-டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
62. தமிழின்பம்-டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
63. தமிழ்க்காதல்-டாக்டர் வ.சுப. மாணிக்கம்
64. திருக்குறளில் நகைச்சுவை-திருக்குறல் முனுசாமி
65. தாய் (மாக்சிம் கார்க்கி)- (தமிழாக்கம்)-தொ.மு.சி.ரகுநாதன்
66. புதுமைபித்தன் வரலாறு-தொ.மு.சி. ரகுநாதன்
67. இரசிகமணி டி.கே.சி-தொ.மு. பாஸ்கர தொண்டைமான்
68. இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)-நா. பார்த்தசாரதி
69. கான்சாகிபு சண்டை-நா. வானமாமலை
70. அயோத்திதாஸர் சிந்தனைகள் (தொகுதி1,2,3)- பண்டிதர் அயோத்திதாஸர்
71. தமிழ் மந்திரம்-பாலூர் கண்ணப்ப முதலியார்
72. மந்திரங்கள் என்றால் என்ன?-பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
73. திருத்தொண்டர் வரலாறு-பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
74. தாயுமானவர்-பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
75. பட்டினத்தடிகள்-பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
76. நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்-முல்லை முத்தையா
77. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்-முல்லை முத்தையா
78. நல்ல மனைவியை அடைவது எப்படி?-வல்லிக்கண்ணன்
79. நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா-வல்லிக்கண்ணன்
80. எம்.கே.டி.பாகவதர் கதை-எழுத்தாளர் விந்தன்
81. நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்- எழுத்தாளர் விந்தன்
82. பாரதியார் சரித்திரம்- பரலி.சு.நெல்லையப்பர்
83. வ.உ.சிதம்பரம்பிள்ளை சரித்திரம்-பரலி சு. நெல்லையப்பர்
84.. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்-மயிலை சீனி. வேங்கடசாமி
85.. சங்க காலச் சேர சோழ பாண்டியர்-மயிலை சீனி. வெங்கடசாமி
86.. வள்ளலார் கண்ட சாகாக் கலை-ம.பொ.சிவஞானம்
87. இந்தி பொது மொழியா ? -மறைமலை அடிகள்
88. பெண்ணின் பெருமை- திரு.வி.க.
89. வ.உ.சி. எழுதிய நூல்கள்-வ.உ.சி. சிதம்பரனார்
90. பெடரல் இந்தியா, சமஸ்தான இந்தியா-வெ.சாமிநாத சர்மா
91. தென்னாட்டுப் போர்க்களங்கள்-கா. அப்பாதுத்ரையார்
92. ஸ்டாலினுக்குத் தெரியும்-புதுமைப் பித்தனின் அரசியல் நூல்
93. கள்ளர் சரித்திரம்-நா.மு. வேங்கடசாமி நாட்டார்
94. பிற்கால சோழர் சரித்தரம்-சதாசிவ பண்டாரத்தார்
95. பிரதாப முதலியார் சரித்திரம்- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
96. பகுத்தறிவு என்றால் என்ன?-ம. சிங்காரவேலர்
97. பூலித்தேவனா? புலித்தேவனா?-புலியூர் கேசிகன்
98. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-1,2-செகவீரபாண்டியனார்
99. தமிழக அகழ்வாய்வுகள் பாய்ச்சும் வெளிச்சம்-தி.செம்பியன்
100. தமிழ்ஸ்பாட் இதழ்கள் தொகுப்பு- தி. சரவணபாரதி
புத்தகங்களை www.paalaru.com இணையதளம் மூலம் ஆன்லைனில் பெறலாம்.
முகவரி: தமிழ் நண்பன் & பாலாறு பதிப்பகம், GROUP OF TAMIL SPOT MEDIA ENTERPRISES, வாசிப்போம்-வளர்வோம் அறக்கட்டளை, 10/9, அப்பாதுரையார் தெரு, தேனாம்பேட்டை, சென்னை-18, கைபேசி: 97907 50950, 97907 509415, இமெயில்: [email protected], [email protected]