நமது நிருபர், பாலாறு பக்திமணம் இதழ். சென்னை
சென்னை, அக். 1: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2024 அட்டவணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 13 வரை வெகு விமரிசையாக நடைபெறும். இதற்கான அட்டவணையை பக்தர்கள் வசதிக்காக முன்கூட்டியே இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
1,டிசம்பர், 2024 ஞாயிறு
அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் காமதேனு வாகனம்.
2,டிசம்பர், 2024 திங்கள் அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் சிம்ம வாகனம்.
3 டிசம்பர், 2024 செவ்வாய்
அருள்மிகு விநாயகர் உற்சவம் வெள்ளி மூஷிக வாகனம் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம்.
4,டிசம்பர் 2024 புதன் நாள் 1
காலை முதல் லக்னம் கொடியேற்றம் (கொடியேற்றம்) பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்.
இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி,ஹம்ச வாகனம்.
5,டிசம்பர் 2024 வியாழன் நாள் 2 காலை விநாயகர், சந்திரசேகரர் தங்க சூர்ய பிரபை வாகனம்.
இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம்.
6 டிசம்பர் 2024 வெள்ளி நாள் 3 காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம்.
இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்ன வாகனம்.
7,டிசம்பர் 2024 சனி நாள் 4
காலை விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம்.
இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்ச வாகனம்.
8,டிசம்பர் 2024 ஞாயிறு நாள் 5 காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனம்.
இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.
9,டிசம்பர் 2024 திங்கள் நாள் 6 காலை விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா.
இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.
10,டிசம்பர் 2024 செவ்வாய் நாள் 7 காலை முதல் லக்னம் விநாயகர் தேர் வடம் பிடித்தல் பஞ்சமூர்த்திகள் மகாராதங்கள் தேரோட்டம்
11,டிசம்பர் 2024 புதன் நாள் 8
காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனம்.
மாலை 4.30 மணி பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்
12,டிசம்பர் 2024 வியாழன் நாள் 9 காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷ முனி வாகனம்.
இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம்.
13,டிசம்பர் 2024 வெள்ளி நாள் 10
அதிகாலை 4 மணி IST பரணி தீபம் மாலை 6 மணி IST
மகா தீபம் (கார்த்திகை தீபம்)
இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனம்.
14,டிசம்பர் 2024 சனிக்கிழமை
இரவு 9 மணி IST ஐயங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்.
15,டிசம்பர் 2024 ஞாயிறு
அதிகாலை அருள்மிகு உண்ணாமூலை உடனுறை
ஸ்ரீ அண்ணாமலையார்
(அருள்மிகு பெரிய விநாயகர் ) கிரி பிரதக்ஷணம்.
இரவு 9 மணி IST ஐயன்குளத்தில்
அருள்மிகு பராசக்தி அம்மன் தெப்பல்உற்சவம்.
16,டிசம்பர் 2024 திங்கள்
இரவு 9 மணி IST ஐயங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல்உற்சவம்.
17,டிசம்பர் 2024 செவ்வாய்
இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்..