சென்னை, செப். 26:
தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (85) காலமானார்.
முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் செப். 26, வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன். மேலும் அவருடைய உடலும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த இராம.திரு. சம்பந்தம் அவர்களின் உடலும் இதே மருத்துவமனைக்கு கொடையாகவே வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.