எழுதுக அமைப்பில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான நேரடி ஆலோசனை சந்திப்பு காஞ்சிபுரத்தில் 01.10.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், புத்தக வாசிப்பு, களப்பணிகள், பொறுப்பும்,கடமையும் ஆகிய பல்வேறு பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களும், படைப்பாளிகளும் வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்களும் அதன் விவரமும் பின்வருமாறு:
1)புத்தக வாசிப்பு:
– புத்தகம் படிக்கும் முறை
– குறிப்பெடுக்கும் முறை
– 20 நிமிட வாசிப்பு
– கருத்து பகிர்வு/விமர்சனம்
2) களப்பணிகள்:
– களப் பணி மேற்கொண்ட விதம்
– கிடைத்த அனுபவம்
– களப்பணியின் முக்கியத்துவம்
3) முழுமையான புத்தகம்:
– என்னுடைய, வாழ்த்துரை, உள்ளடக்கம்
– களப் பணி அனுபவங்களை சரியான முறையில் தொகுத்து எழுதப்பட்டுள்ளதா
– அவற்றை புத்தகத்தில் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா.
4)பொறுப்பும் கடமையும்:
– ஒவ்வொருவரும் எழுதுக குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
– நாமே தினசரி அவர்களிடம் பேச வேண்டும்
– அவர்கள் போன் செய்யும் பொழுது எடுக்க முடியவில்லை என்றால் அதன் பிறகு கட்டாயம் அவர்களை நாம் தொடர்பு கொள்ள வேண்டும்.
– குறித்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் உறுதியை ஏற்க வேண்டும்.
5)உறுதி மொழி கடிதம்:
– உறுதிமொழி கடிதத்தை பெற்றோர்களிடம் வாசித்துக் காட்டி நமது கையொப்பம் மற்றும் அவர்களின் கையொப்பத்தையும் பெறுதல்.
– ஒருங்கிணைப்பாளர் தரும் முகவரிக்கு உறுதிமொழி கடிதத்தை அஞ்சல் மூலம் அனுப்புதல்.
6)நமது நூலகம்:
– நமது வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்கலாம்
– நம்மிடம் உள்ள சில புத்தகங்களை பட்டியலிடுதல்
– அந்த புத்தகங்களை அடுக்கி வைக்க ஒரு இடத்தை தேர்வு செய்தல்
– அந்த இடத்தை நூலகமாக நினைத்து பராமரித்தல்
– அவ்வப்போது புத்தகங்களை எடுத்து வாசித்தல்
– அதன் பிறகு நாம் சேமிக்கும்/ கடைகளில் வாங்கும் புத்தகங்களை அங்கு கொண்டு வந்து சேகரித்தல்
7) நமது புத்தகத்தை திரும்பத் திரும்ப வாசித்தல்:
– நாம் எழுதிய புத்தகத்தை இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு ஐந்து முறை படித்துப் பார்க்க வேண்டும்
– அது இன்னும் செம்மையாக எவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம் என்று குறித்துக் கொள்ளுங்கள்.
8)புத்தக வெளியீடு:
– விழா ஏற்பாடுகளில் நமது பங்களிப்பை வழங்குதல்
– ஒருங்கிணைப்பாளர்கள் தரும் வேலைகளை அக்கறையோடு செய்ய முன்வருதல் உள்ளிட்டவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்கேற்ற எழுதுக அமைப்பின் பொறுப்பாளர்கள் /ஒருங்கிணைப்பாளர்கள்:
திரு சுகுமாறன்
திருமதி இலாவண்யா
திரு முரளி
திருமதி பூங்குழலி
திரு மோகன காந்தி
திருமதி தமிழ்ச்செல்வி
திரு பாலச்சந்தர்
திருமதி சத்யபிரியா
மரு.பாலமுருகன்
திரு பூபதி
திரு பார்த்திபன்
மாணவி லோகஸ்ரீ
மாணவி மீனலோசினி
மாணவி சுகன்யா
மாணவி சூரிய பிரபா
மாணவி ஜீவ லட்சுமி
மாணவி அகல்விழி
இளம் படைப்பாளர்கள் விவரம்:
மாணவி நிஷா
மாணவி தர்ஷினி
மாணவி ஹேமமாலினி
மாணவி கனிஷ்கா
மாணவி சஞ்சிதா
மாணவி அபிநித்ய ஸ்ரீ
மாணவி மோனிஷா
மாணவி மேனகா
மாணவன் சந்தோஷ்
மாணவன் புவன்சேது
மாணவன் சபரீஷ்வர்
மாணவன் வசீகரன்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை சந்திப்பும் நடைபெற்றது.
