நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா
சென்னை, ஜனவரி 27: பாலாறு பதிப்பகத்தின் 5 புத்தகங்கள் உள்பட இளம் மாணவ அறிமுக எழுத்தாளர்கள் எழுதிய 101 நூல்களை ஒரேநாளில், ஒரேமேடையில் வெளியிட்டு சாதனை படைக்கிறார் “தலைமைப் பண்பாளர்” இறையன்பு ஐஏஎஸ் அவர்கள்.
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு கிள்ளிவளவன் தலைமையிலான தன்னார்வலர்கள் நடத்தி வரும் எழுதுக எனும் மாணவர்களை எழுத வைக்கும் இயக்கம் இந்த விழாவை முன்னெடுக்கிறது.
இதற்கான விழா, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் ஜனவரி 29ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பதிப்பாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், புத்தக பிரியர்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை எழுதுக அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 101 இளம் மாணவ எழுத்தாளர்களின் படைப்புகளை இறையன்பு அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார். பாலாறு பதிப்பகம் சார்பில் 5 நூல்கள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. விழாவில், பாலாறு பதிப்பகத்தின் உரிமையாளர் உமா சரவணன் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.