பாலாறு நியூஸ் மீடியா:
சென்னை, செப். 17: பெரியாரின் 146வது பிறந்த நாளையொட்டி மே பதினேழு இயக்கம் மற்றும் தாய் தமிழர் இயக்கம் சார்பாக வருகிற 18-09-2024 (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை செங்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தாய் தமிழர் இயக்கத்தின் தோழர் அருள் நாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார் மற்றும் கொண்டல்சாமி, தமிழ் சாக்ரடீசு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மேலும், மே பதினேழு இயக்கத்தின் வெளியீடான ‘அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வரலாறும் அவசியமும்’ என்ற புதிய நூல் இந்த பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பான விவரங்களை மே பதினேழு இயக்கம், 9884864010 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என நூல் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.