பாலாறு நியூஸ் மீடியா, சென்னை
www.paalaru.com, 9790750950, 9790750415
சென்னை, செப். 17: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 29-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதனை அச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான முனைவர் இதயகீதம் இராமானுஜம் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழகத்தில் செயல்படும் இலக்கிய, தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பின் வரிசையில் முக்கியமான இடத்தை வகிக்கும் சங்கமாகும். இந்த சங்கம் ஆண்டுக்கு ஒருமுறை முறையாக பொதுக்குழுவை கூட்டி அதனை செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உறுப்பினர்கள் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அச் சங்கத்தின் அலுவலக வளாகத்தில் வருகிற 29ம் தேதி (29.09.24) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் முனைவர் கோ. பெரியண்ணன் தலைமை வகிக்கிறார். சங்கத்தின் பொதுச்செயலாளர் இதயகீதம் இராமானுஜம், ஆண்டறிக்கை வாசித்து, கணக்குகளை சமர்ப்பித்து, புதிய அறிவிப்புகளையும், சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகளையும் விளக்க உள்ளார்.
முடிவில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களை சங்கத்தின் பொருளாளர் கி. பிரபாகரன் தாக்கல் செய்யவும், புதிய தணிக்கையாளரை நியமிக்க ஒப்புதல் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வருகிற 2025ம் ஆண்டு முதல் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சுவது குறித்து உறுப்பினர்கள் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. புதிய முன்னெடுப்புகள், வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது.
எனவே உறுப்பினர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வருகைதந்து, பொதுக்குழுவை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக நிகழ்த்தி தரும்படி அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் இதயகீதம் இராமானுஜம், உறுப்பினரகளுக்கு அனுப்பியுள்ள அழைப்பிதழ்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பான விவரங்களை, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், இந்திய அலுவலர்கள் சங்க வளாகம், 69, திரு.வி.க. நெடுஞ்சாலை, அஜந்தா ஓட்டல் அருகில், இராயப்பேட்டை, சென்னை 600 014 என்ற முகவரியை தொடர்பு கொண்டு பெறலாம் என சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அக்னி பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்பு எண்கள்: 9840321522, 9940014963, 9444494839, 9444043173,